பதிமுகம் - Pathimugam

₹ 160 / Piece

₹ 180

11%

Whatsapp
Facebook

Delivery Options

Get delivery at your doorstep


பதிமுகம் தண்ணீர் என்பது கேட்பதற்கே புதிதாக இருக்கலாம். கேரள மக்கள் நம்மைப் போலவே வெறும் தண்ணீரை மட்டும் குடிப்பதற்கு பதிலாக சீரகம், சோம்பு போன்ற பொருள்களைப் போட்டு கொதிக்க விட்டு, மூலிகை தண்ணீராகத் தான் குடிப்பார்கள். அப்படி அவர்கள் குடிக்கும் முக்கியமான ஒரு தண்ணீர் தான் இந்த பதிமுகம் தண்ணீர்.

பதிமுகம் என்பது ஒரு மரத்தினை செதுக்கி பட்டையாக பிரித்தெடுத்து வைத்திருப்பார்கள். கட்டை வடிவிலும் இருக்கும். மரப்பட்டை சீவல்களாகவும் கிடைக்கும்

ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து அதை அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள்.

சூடாக இருக்கும் தண்ணீரில் இரண்டு இன்ச் அளவுக்கு மட்டும் பதிமுகம் பட்டையைச் சேர்த்துக் கொள்ளுங்கள். சீவல்களாக இருந்தால் இரண்டு சிட்டிகை அளவு கையில் எடுத்து போடுங்கள்.

இந்த தண்ணீர் நன்கு கொதிக்க கொதிக்க தண்ணீர் பிங்க் நிறத்தில் மாறும். இப்போது அடுப்பை அணைத்து விடலாம். பதிமுகம் தண்ணீர் ரெடி!

அந்த பதிமுகம் நீரை இப்படித்தான் குடிக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடு எதுவும் கிடையாது. எப்படி வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் குடிக்கலாம்.

நாள் முழுக்க தண்ணீருக்கு பதிலாக இந்த நீரையே குடிக்கலாம். வழக்கமாக தண்ணீர் தாகத்தை குறைப்பதை விட இந்த நீர் நன்றாகவே தாகத்தைத் தணிக்கும்.

பதிமுகத்தில் உள்ள கலவைகள் பலவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. இவை காயங்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. காயத்தை கழுவுவதற்கு உதவுகிறது. மேலும் வீக்கம் மற்றும் வலியை குறைக்க செய்கிறது. மூட்டுவலி பிரச்சனைகள் கொண்டிருப்பவர்கள் இந்த நீரை குடிப்பது மிகுந்த பலனை அளிக்கும்.

அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ள பதிமுகம் குடிநீரானது ஒவ்வாமை போன்ற சுவாசப்பாதை வீக்கத்துக்கு உதவுகிறது. இது வெளிப்புற காயங்கள் போன்று பல்வேறு மூளை நோய்களுக்கு அல்சைமர், பார்கின்சன் நோய் போன்ற மூளை நோய்களுக்கு காரணமான நியூரோ இன்ஃப்ளமேஷனுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.

பதிமுகத்தில் இருக்கும் 3-DSC, என்னும் மூலக்கூறு பெருங்குடல் புற்றுநோய் உயிரணு வளர்ச்சியை தடுக்கிறது. இது மனித உணவுக்குழாய் புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. நரம்பு மண்டல புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. மேலும் இதில் உள்ள பிரேசிலின் கர்ப்பப்பை வாய், நுரையீரல், மார்பகம் மற்றும் ஹெபடோ புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுகிறது.
 

 

 


 


 


Reviews and Ratings

StarStarStarStarStar
StarStarStarStarStar

No Customer Reviews

Share your thoughts with other customers