Pancha Karpa- பஞ்ச கற்ப பொடி
₹ 150
Delivery Options
Get delivery at your doorstep
கலந்துள்ள பொருட்கள்.
வெள்ளை மிளகு, கடுக்காய்த் தோல், வேப்பம் வித்து, நெல்லி வற்றல், கஸ்தூரி மஞ்சள்.
நன்மைகள்:
பஞ்சகற்ப குளியல் நம் உடல் உஷ்ணத்தை குறைத்து, பஞ்சபூத அழுக்குகளை நீக்கும்
நாள்பட்ட தலைவலியை நீக்கும், கண் எரிச்சலை குறைத்து நம் கண்களை பலப்படுத்தும்
நம் உடம்பில் உள்ள நச்சு நீரை வெளியேற்றும், பித்தம் தனியும்
ஞாபகசக்தியை அதிகரிக்கும், கபாலத்தை கெட்டியாக்கும், தலை முடி கருப்பாக வளர உதவும்
சரும வியாதிகளை அண்ட விடாமல் செய்து தோலை பொலிவடைய செய்யும், பொடுகு தொல்லையை நீக்கும்.
இது நம் ஒட்டுமொத்த ஆரோகியத்தையும் மேன்படுத்தி நம்மை காக்கும்.
உபயோகிக்கும் முறை.
2 to 3 டீஸ்பூன் பஞ்ச கற்ப மூலிகை குளியல் பொடியை 200 to 250 மில்லி காய்ச்சாத பாலில் நன்றாக முதலில் கலக்க வேண்டும், பொடி பாலில் நன்கு கலந்த பின்னர், சிறு நெருப்பு (Slow Flame) இல் காய்ச்ச வேண்டும், கட்டாயம் High Flameல் வைத்து காய்ச்ச கூடாது. ஒரு கரண்டியை வைத்து கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும், சிறிது நேரத்தில் லேசாக ஆவி வர ஆரம்பிக்கும் அப்போது அடுப்பை அனைத்து விடவேண்டும், ரொம்ப கொதிக்க வைத்தால் திரண்டு போய்விடும். சூடு ஆறியபின் தலைமுதல் பாதம் வரை உடம்பு முழுவதும்(கண்கள் தவிர) தேய்த்து 20 – 30 நிமிடங்கள் காய வைக்க வேண்டும், 30 நிமிடங்களில் நன்கு காய்ந்து இறுக்கி விடும், பின்னர் வெது வெதுப்பான வெந்நீரில் குளிக்க வேண்டும், அப்போது சோப்பு, ஷாம்பு போன்றவற்றை கட்டாயம் உபயோகிக்க கூடாது. சீயக்காய் உபயோகிக்கலாம். தலைக்கு நீர் ஊற்றும் போது கவனமாக கண்களை மூடி கொள்ள வேண்டும், வெண்மிளகு இருப்பதால் கண்ணில் பட்டால் எரிச்சல் ஏற்படும்.
இதை தேய்த்திருக்கும் போதும், குளிக்கும் போதும் நம் உடம்பில் இருந்து உஷ்ணம் வெளியேறுவதை உணர முடியும், குளித்து முடித்ததும் நம் உடம்பு லேசாக இருப்பதை நாம் உணர முடியும்.
10 வயதிற்கு மேல் உள்ள சிறுவர்களில் இருந்து இதை உபயோகிக்கலாம், 10 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 15 நாட்களுக்கொரு முறை பயன் படுத்தினால் போதுமானது. பெரியவர்கள் வாரம் ஒருமுறையோ இருமுறையோ இந்த பஞ்ச கல்ப குளியலை பின்பற்றி குளிக்கலாம்.
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers