அரகஜா - Arakaja - அரகஜா திலகம்.
₹ 90 / Gram
₹ 105
14%
Delivery Options
Get delivery at your doorstep
அரகஜா .
இன்று நம் பலருக்குத் தெரியாமல் போன ஒரு ஆன்மீக பொருள் அரகஜா எனப்படுகிறது.
கஸ்தூரி, பன்னீர் ரோஜா, சம்பங்கி மொக்கு, அத்தர், ஜவ்வாது , புனுகு, ஜாதிபத்திரி, சாதிக்காய், கற்பூரம் போன்றவைகளை வைத்து மை போன்று தயாரிக்கும் ஒரு பொருள்தான் அரகஜா .
குலதெய்வ வழிபாட்டில், சிவ வழிபாட்டில் முக்கிய பொருளாக பயன்படுகிறது. இதை கரைத்து அபிஷேகம் செய்யவும் பொட்டுக்களாக வைக்கவும் மிகவும் உகந்தது. இதனுடைய பலன் அபரிமிதமானது,
வீட்டில் குலதெய்வத்திற்கு வழிபாட்டிற்கு மஞ்சள் அரகஜா இரண்டையும் ஒன்றாக கலந்து திலகமிட்டு குலதெய்வ வழிபாடு செய்தால் நம் மனதில் ஏற்படும் தீய சிந்தனைகள் இவைகளில் இருந்து விடுபடலாம். நம் குல தெய்வத்தின் அருள் கிடைக்க இந்த அரகஜா திலகம் இட்டுக் கொள்ளலாம். மேலும் சிவனுக்கும் தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு அபிஷேகம் செய்வதற்கு இந்த அரகஜா நாம் தானமாக ஆலயத்திற்கு வாங்கி தரலாம் .
இந்த அரகஜா தினம் திலகமாக இட்டு சென்றால் நமக்கு வரக்கூடிய பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள நம்மை பலப்படுத்தும் . கண் திருஷ்டியால் வரும் பாதிப்புகள் குறையும். இதிலிருந்து வரும் சுகந்தமான மணம் நம் மனதை எப்பொழுதும் நேர்மையாக நேர் வழியில் இட்டுச் செல்லும் எப்பொழுதும் நம் மனதில் நேர்மறையான எண்ணங்களை வரவழைக்கும், தூண்டும். மனதில் தீய எண்ணத்தை அறவே விலக்கி தெய்வ சிந்தனையும் தெய்வம் ஆற்றலையும் நம்மை சுற்றி பிரகாசிக்க வைக்கும் . வீடுகளில் வழிபாடு செய்யக்கூடிய இடங்களில் வியாபாரம் செய்யக்கூடிய ஸ்தலங்களில் அரகஜா மஞ்சள் இவைகளை திலகமாக சுவர்களில் இட்டு வழிபாடு செய்தாலும் அந்த இடம் நேர்மறை சக்திகளை பெற்றுத்தரும்.
இதை வீடுகளில் பயன்படுத்தும் போது கோயில்களில் கிடைக்கும் நறுமணம் நிறைந்த தெய்வீக தன்மையை கொண்டு வரும்.
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers