அஞ்சனக்கல் - Anjanakkal - Anjanakal - அஞ்சனக் கல்
Delivery Options
Get delivery at your doorstep
*** அஞ்சனக்கல். ***
பூமியில் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பொருட்களில் நிறைய சக்திகள் இருக்கின்றன. அதை அறிந்து சரியான முறையில் பயன்படுத்தினால் பல நன்மைகளை நாம் அடையலாம். அப்படிப்பட்ட பொருள்களில் ஒன்றுதான் அஞ்சனக்கல் ஆகும்.
அஞ்சனக்கல்லை பற்றி, ‘போகர் 12000’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்லை அக்காலத்திலேயே சித்தர்கள் பயன்படுத்தி பலனடைந்துள்ளனர். அஞ்சனக்கல்லை, ‘சுர்மா கல்’ என்றும் அழைப்பார்கள். இந்தக் கல் பஞ்சாப், ஆந்திரா, தென் தமிழகத்திலும் கிடைக்கிறது. இவை இலகுவாக உடையும் தன்மையை உடையது. ஆனால், தண்ணீரில் கரையாது.
இதை ஆறு வகைகளாகப் பிரிக்கலாம். அவை: சவ்வீராஞ்சனம், ரசாஞ்சானம், ஸ்ரோதாஞ்சனம், நீலாஞ்சனம், ரத்தாஞ்சானம், புஷ்பாஞ்சனம் ஆகியவையாகும். இதில் நீலாஞ்சனக்கல் சுலபமாகக் கிடைக்கக்கூடியது. மருத்துவத்தில் வெளிப்பூச்சுக்கு அதிகம் பயன்படுகிறது.
இஸ்லாமியர்கள் இந்த சுர்மா கல்லை அதிகம் பயன்படுத்துகிறார்கள். கண்களிலும், புருவத்திலும் ஆண்கள், பெண்கள் இருவருமே அஞ்சனக்கல் மையை பயன்படுத்துகிறார்கள். அழகுக்காக மட்டுமில்லாமல், இந்த அஞ்சனக்கல்லை பயன்படுத்துவது கண்களுக்கு குளிர்ச்சியை கொடுப்பதாகும். அதுமட்டுமின்றி, வசீகரத்தை ஏற்படுத்தக்கூடியது.
குழந்தைகளுக்கு திருஷ்டி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த அஞ்சன மையைத்தான் குழந்தைகளுக்கு கண்ணத்தில், நெற்றியில் இட்டு வந்துள்ளனர்.
அஞ்சனக்கல்லை பூஜையறையில் வைக்கும் போது எந்த தீயசக்திகளும் வீட்டிற்குள் நுழையாது என்று சொல்லப்படுகிறது.
அஞ்சனக்கல்லை இழைத்து அத்துடன் குங்குமப்பூ சிறிது சேர்த்து நெற்றியில் திலகம் இட்டுக்கொண்டு வெளியே செல்லும்போது, எந்த காரியத்திற்காக செல்கிறோமோ அது நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
வீட்டில் ஒரு பவுலில் அஞ்சனக்கல்லை போட்டுவிட்டு அதில் காசுகள் போட்டு வைத்தால் வீட்டில் பணம் பெருகும். பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி இந்த அஞ்சனக்கல்லிற்கு உள்ளது.
தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் தங்கள் அறையில் அஞ்சனக்கல்லை வைத்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
கூடுதல் தகவல்: குருவாயூர் கோயிலில் உள்ள கிருஷ்ணன் சிலை அஞ்சனக்கல்லை செதுக்கி சிற்பமாக செய்யப்பட்டது.
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers

