வெட்டிவேர் மாலை 2 Feet - Vettiver Maalai
Size:
Delivery Options
Get delivery at your doorstep
வெட்டி வேர் செடி மட்டுமல்ல. அதன் வேர் கூட வாசனை தருகிறது என்றால் அது வெட்டிவேர் தான். மாலையாக தொடுப்பது முதல் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்வது வரை வெட்டிவேருக்கு என்று தனி மவுசு உண்டு. வெட்டிவேரினை விலாமிச்சை வேர் எனவும் கூறப்படுகிறது. புல் இனத்தை சேர்ந்த வெட்டிவேர் பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். இது 4 முதல் 5 அடி உயரம் வரை வளரும். இதன் வேரை வெட்டி எடுத்தபின், புல்லையும், வேரையும் வெட்டியபின், நடுப்பகுதியான தண்டை மட்டும் மண்ணில் ஊன்றினாலே போதும். மீண்டும் வெட்டிவேர் செடி தானாவே வளர ஆரம்பித்து விடும்.இப்படி வெட்டி எடுத்து விளைவிப்பதாலும் வெட்டிவேர் என பெயர் வந்தது.
- ஆன்மீக நன்மைகள்: வீட்டின் பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களுக்கும், சிலைகளுக்கும் இந்த மாலையை அணிவிப்பது வழக்கம். இது மகாலட்சுமி தேவியின் அருளை ஈர்க்கும் ஆற்றல் கொண்டது என ஆன்மீகத்தில் நம்பப்படுகிறது.
- மன அமைதி: வெட்டிவேரின் நறுமணம் மன அழுத்தத்தைக் குறைத்து, அமைதியான மற்றும் நேர்மறையான அதிர்வலைகளை உருவாக்குகிறது.
- இயற்கை நறுமணம்: வீட்டிலும், வியாபார ஸ்தலங்களின் வாசலிலும் இதை மாட்டி வைப்பதால் துர்நாற்றம் நீங்கி, புத்துணர்ச்சியான வாசனை நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கும்.
Reviews and Ratings
No reviews yet
Be the first to share your experience — it helps other shoppers decide.
You'll be asked to sign in first.

